ஸ்ரீ பேச்சியம்மன் திருமண தகவல் மையம்

ஜோதிடம்

நாம் கருவில் உண்டாகும் போதே நமது ஜாதகம் நிர்ணயிக்கப்படுகின்றது. இது எல்லாம் வல்ல ஆண்டவனின் செயல். அக்கரு உண்டான தருனமே நமது ஜெனன நேரம் குறிக்கப்பட்டுவிட்டது. அது சுக பிரசவமாக இருந்தாலும் சரி அல்லது சிசேரியன் முறையில் பிறந்தாலும் சரி அது இறைவனால் நிச்சயிக்கப்பட்ட நேரம். நாம் என்னதான் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கவேண்டும் என்று சிசேரியன் செய்ய ஏற்பாடுசெய்தாலும் அந்நேரம் ஆண்டவன் குறிப்பிட்ட நேரமாயிருந்தால் தான் குழந்தை நாம் குறிப்பிட்ட அந்த நேரத்தில் பிறக்கும். அவ்வாறு ஆண்டவன் குறிப்பிடாத நேரமாயிருந்தால் நாம் என்னதான் தலைகீழாக நின்றாலும் நாம் குறிப்பிட்ட அந்த நேரத்தில் சிசேரியன் நடைபெறாமல் தடைபட்டு போகும். இது அனுபவ உண்மை.சரி ஜோதிடம் என்றால் என்னவென்று பார்ப்போம். நமது முன்னோர்கள் சூரியனை மையமாக வைத்து ஒன்பது நவகோள்கள் உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்கள். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் சாயா கிரகங்கள் (சாயா கிரகங்கள் என்றால் நிழல் கிரகங்கள் என்று பொருள்) ராகு மற்றும் கேது.

about_img

மேற்படி சாயா கிரகங்களைத் தவிர மற்ற ஏழு கிரகங்களின் ஒளிகள் நம்மீது படுகின்றன. அந்த ஒளிகள் எத்தனை சதவீதம் நம்மீது படுகின்றன அல்லது எத்தனை சதவீதம் நம்மால் அக்கிரகங்களின் ஒளியினை ஈர்க்க முடியும் என்பதை அறிவதே ஜோதிடம். நமது ஜாதகத்தின் மையப்புள்ளி லக்னம் என்பதாகும். மேற்படி லக்னத்தினை மையமாக வைத்துத்தான் மேற்படி கிரகங்களின் ஒளிகள் நம்மீது படுகின்றன என்பதனை அறிய முடியும். மேலும் அக்கிரகங்களின் ஒளிகள் நம் வாழ்வில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் அதை எப்பொழுது ஏற்படுத்தும் என்பதை நமது ஜாதகத்தின் திசா புத்திகளை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம். மேற்படி ஒன்பது கிரகங்களுமே நன்மை/தீமை/மத்திம பலன்கள் செய்யக் கூடிய கிரகங்கள் தான். சில குறிப்பிட்ட கிரகங்கள் தான் நன்மை செய்யும் சில கிரகங்கள் தீமை மட்டுமே செய்யும் என்பது தவறான கருத்தாகும். உதாரணத்திற்கு சுக்கிர திசையில் துன்பப்பட்டவர்கள் எத்தனையோ நபர்கள் உள்ளனர் அதேபோல் ராகு திசையில் உயர்ந்தவர்கள் எத்தனையே நபர்கள் உள்ளனர். கிரகத்தின் தன்மைகள் ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு ஏற்ப மாறுபடும். இதுவே சித்தர்கள் கூறிய வழிமுறை. இதுவே நடைமுறை உண்மை.

தொடர்பு

+91 97503 42678

தேர்ந்தெடுக்கவும் இராசி அடையாளம்

பூமிக்குச் சார்பான சூரியனுடைய சுற்றுப்பாதையின் தளத்தில், பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 சமமான கோணத் துண்டுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்திய வானியல், சோதிடம் ஆகிய துறைகளில், 30 பாகை அளவு கொண்ட துண்டு ஒவ்வொன்றும் ஓர் இராசி (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) என அழைக்கப்படுகின்றது. பன்னிரண்டு இராசிகளும் சேர்ந்தது இராசிச் சக்கரம் ஆகும். இச் சக்கரத்தில், பூமியையும், அதற்கு வெளியிலுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியையும் இணைக்கும் கோட்டை தொடக்கமாகக் கொண்டு இந்த இராசிப்பகுப்புச் செய்யப்பட்டுள்ளது. இக் கோட்டிலிருந்து அளக்கப்படும் முதல் 30 பாகை கோண அளவு மேட இராசியாகும்.